Untitled Document
2012
26
Aug
நிலவில் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்


வாஷிங்டன்: நிலவில் முதன்முதல் காலடி வைத்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்  நேற்று காலமானார். அவருக்கு வயது 82. அமெரிக்காவின் ஓகியோ நகரில் கடந்த 1930 ஆகஸ்ட் 5ம் தேதி பிறந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங். விஞ்ஞானத்தின் மீது அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்தார். படிப்பு முடித்த பின்பு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில் சேர்ந்து பணியாற்றினார். அப்போது, சோவியத் யூனியனும் அமெரிக்காவும் போட்டி போட்டு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தன. அந்த காலத்தில் நிலவுக்கு சாட்டிலைட் அனுப்புவதே பெரிய சாதனையாக கருதப்பட்டது. இந்த சூழ்நிலையில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தியது. அப்போது விண்வெளி பயணத்துக்கு தேர்வானவர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங்கும் ஒருவர். கடைசியில் கடந்த 1969ம் ஆண்டு அப்போலோ11 என்ற விண்கலத்தில் நிலவுக்கு பயணமானார் நீல் ஆம்ஸ்ட்ராங். அவருடன் எட்வின் ஆல்ட்ரின் என்பவரும் உடன் சென்றார். 4 லட்சம் கி.மீ. தூரப் பயணத்துக்கு பின் 1969 ஜூ¨லை 20ம் தேதி நிலவில் அப்போலே தரையிறங்கியது. விண்கலத்தில் வெளியில் வந்த நீல் ஆம்ஸ்ட்ராங், நிலவில் முதன்முதல் தனது காலடியை பதித்தார். அப்போது உலகமே அந்த காட்சியை பார்த்து அதிசயித்தது. மேலும் நிலவில் காலடி பதித்த முதல் மனிதர் என்ற சாதனையை நீல் ஆம்ஸ்ட்ராங் ஏற்படுத்தினார். எட்வின் ஆல்ட்ரின் நிலவின் மேற்பரப்பில் 4 மணி நேரம் நடந்து சாதனை படைத்தார்.

அதன்பின், கடந்த 1971ம் ஆண்டு நாசாவில் இருந்து விலகிய ஆம்ஸ்ட்ராங், சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இன்ஜினியரிங் பற்றி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தார். பொது வாழ்க்கையில் இருந்து விலகி இருந்த ஆம்ஸ்ட்ராங், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் நடந்தது. இந்நிலையில் உடல்நிலை மிகவும் மோசமாகி அவர் நேற்று காலமானார். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது. எனினும், நல்ல மனிதர், இன்றைய இளைஞர்கள் மட்டுமன்றி, எதிர்கால சந்ததியினருக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் அவரது சாதனை என்றும் நிலைத்து நிற்கும். அமெரிக்க வரலாற்று ஹீரோக்களின் வரிசையில் அவர் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிஷெல், அமெரிக்க அதிபர் வேட்பாளர் மிட்ரோம்னி உள்பட பல்வேறு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,