Untitled Document
2012
23
Aug
பல ஆண்களை திருமணம் செய்தவர் போலீஸ் அதிகாரிகளையும் வீழ்த்தினாரா 'கல்யாண ராணி'

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை: சென்னையில் பல ஆண்களை திருமணம் செய்து பணம், நகைகளை சுருட்டிய கேரள இளம்பெண், போலீஸ் அதிகாரிகளையும் ஏமாற்றியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள மாநிலம் கேசவபுரத்தை சேர்ந்தவர் சஹானாஸ். இவருக்கு பெற்றோர் இல்லை. சித்தீஷ் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. சில ஆண்டுகளில் கணவன், குழந்தைகளை பிரிந்து, திருச்சூரை சேர்ந்த வாலிபரை 2வது திருமணம் செய்துள்ளார். அவரிடம் பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவானார். இதுபோல் கேரளாவில் மட்டும் 5 வாலிபர்களை திருமணம் செய்து பணம், நகைகளை சுருட்டி உள்ளார்.

அதன்பின், சென்னைக்கு வந்துள்ளார். வாலிபர் ஒருவரின் போட்டோவை காட்டி, Ôஇவர் என் தோழியை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார். இவரை பற்றிய தகவல் தெரியுமாÕ என கண்ணில் தென்படும் இளைஞர்களிடம் விசாரித்துள்ளார். பரிதாபப்பட்டு பேசுபவர்களிடம் தன் செல்போன் நம்பரை கொடுப்பார். அவர்களிடம் தொடர்ந்து பேசி மயங்க வைத்த சஹானாஸ், திருமண ஆசையை தூண்டி விட்டுள்ளார். அதில் சிக்கும் வாலிபரை திருமணம் செய்து கொண்டு சில நாள் குடும்பம் நடத்தி பணம், நகையை சுருட்டி தலைமறைவாகி உள்ளார். இதுபோல், சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சரவணனிடம் (33), ரூ.50 ஆயிரம் அபேஸ் செய்தார். அடையார் செல்போன் கடையில் வேலை செய்யும் மற்றொரு சரவணனிடம் (28) ஒன்றரை பவுன் நகை வாங்கி ஏமாற்றி உள்ளார். தி.நகர் பிளாட்பாரத்தில் கடை வைத்திருக்கும் ராஜாவிடம் பணம், நகையை அபேஸ் செய்து ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து 3 பேரும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், போரூர் முகலிவாக்கம் எஸ்எஸ் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டனை (25) திருமணம் செய்து, ஐஏஎஸ் படிப்பதாக கூறி ரூ.1.85 லட்சம் சுருட்டி உள்ளார். அவரை கைகழுவிவிட்டு, புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா (28) என்பவரை திருமணம் செய்து இதேபோல் ஏமாற்றி உள்ளார். இந்த புகார்கள் குறித்து அடையாறு உதவி கமிஷனர் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. சஹானாஸ் பல ஆண்களை ஏமாற்றிய போது, பல போலீஸ் அதிகாரிகளையும் தனக்கு தெரியும் என்று ஆண்களிடம் கூறியுள்ளார். ஏமாறியவர்கள் போன் செய்தால், அந்த போலீஸ் அதிகாரி எனக்கு மாமா உறவு முறை. அவரிடம் சொல்லி பொய் வழக்கு போட சொல்வேன் என்று மிரட்டி உள்ளார். இதனால் பல வாலிபர்கள் பயந்து போய் ஒதுங்கி உள்ளனர். எனினும் சஹானாஸ் சொல்வது உண்மையா, போலீஸ் அதிகாரிகளையும் அவர் மயக்கினாரா என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,