Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
22
Aug
காதல் வலையில் விழவைத்து கைவரிசை வாலிபர்களிடம் பணம் பறித்து மோசடி இளம்பெண்ணை பிடிக்க போலீஸ் தீவிரம்


சென்னை: வக்கீல், சமூக சேவகி என்று கூறி இளைஞர்களை மயக்கி பணம் பறித்த இளம்பெண்ணை பிடிக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் சரவணன் (33). சின்னதாக அலுமினிய நிறுவனம் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவரை தொடர்பு கொண்ட இளம்பெண் ஒருவர், செல்போன் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறினார். பின்னர் அடிக்கடி தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். போனிலேயே இனிக்க இனிக்க பேசி அவரை தனது வலையில் விழ வைத்தார்.  வக்கீலுக்கு படித்து வருவதாகவும் அதற்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கூறி சரவணனிடம் ரூ.50 ஆயிரம் பெற்றுள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டது. அடையார் செல்போன் கடையில் வேலை செய்யும் மற்றொரு சரவணன் (28) என்பவரிடமும் இதே பாணியில் போனில் தொடர்பு கொண்டு அறிமுகமானார் அந்தப் பெண். காதலிப்பதாக அவர் கூறிய ஆசை வார்த்தைகளை சரவணன் நம்பினார். ‘என் தோழி திருமணத்துக்கு செல்ல வேண்டும். அணிந்து செல்ல நகை எதுவும் இல்லையே’ என்று இளம்பெண் புலம்பி உள்ளார். பரிதாபப்பட்ட சரவணன், ஒன்றரை பவுன் நகை வாங்கி கொடுத்துள்ளார். நகையை பெற்றுச் சென்ற பெண், செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

இதேபோன்று அனாதை குழந்தைகளுக்கு துணி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கூறி தி.நகர் பிளாட்பாரத்தில் கடை வைத்திருக்கும் ராஜா என்பவரிடமும் அந்தப் பெண் துணி மற்றும் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட 3 பேரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், அந்தப் பெண் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷெகா நாத் (25) என்று தெரியவந்துள்ளது. அவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, உருது, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகள் தெரியும் என்று கூறப்படுகிறது. மோசடி பெண்ணை பிடிக்க கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
muthu kumaran - nellai
8/22/2012 -- 15:35:16

no grils. no tention

karthick - dharmapuri
8/23/2012 -- 10:13:34

ப்ளீஸ் அர்ரெஸ்ட் பண்ணுங்க.மற்றும் கடுமை ஆனா தண்டனை குடுங்க

nithyanandha - maduraiaadhinam
8/23/2012 -- 12:15:11

குண்டலினி யாகம் நடத்த இருக்கிறேன் தயவு செய்து இந்த சிஷ்யை இன் விலாசத்தை கொடுக்கவும்

logesh - savignyletemple
8/23/2012 -- 12:58:26

ஆண்கள்களை விட பெண்கள் இது அதிகம் ஈடுபடுகிறார்கள். Be careful Boys.

arunkumar - dharmapuri
8/24/2012 -- 13:10:20

emarupavarkalai விட emarupaval தான் குற்றாவாளி அதனால் அந்த பெண் செய்தது சரி

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana