தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து செல்ல ‘சீட் பெல்ட்’
சென்னை: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, உள்துறை செயலாளர் ராஜகோபால் ஆகியோரை நேற்று தலைமை செயலகத்தில் தமிழ்நாடு பள்ளி வாகன சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள் அளித்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் 80 சதவீதத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தனியார் வாகனங்களில்தான் பள்ளிக்கு செல்கின்றனர். பள்ளி வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாலை வரி போடுகிறார்கள். ஆனால் நாங்கள் 3 மாதத்திற்கு ஒருமுறை வேனுக்கு ரூ.3825 சாலை வரி கட்ட வேண்டும். அதனால் பள்ளி வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி அளவிலேயே எங்களுக்கும் விதித்தால், வேன் சீட்டின் உயரத்தின் அளவை குறைத்து, குழந்தைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்துச் செல்ல வாகன இருக்கையில் சீட் பெல்ட் போடவும் தயாராக உள்ளோம்’ என்று கூறியுள்ளனர்.