அச்சிறுப்பாக்கத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி
மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தப்பட்டது. அச்சிறுப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் கலந்துகொண¢டனர். பேரூராட்சி தலைவர் தாவூத்பி உசேன், பேரணியை தொடங்கி வைத்தார். எம்ஜிஆர் சிலை அருகே இருந்து புறப்பட்ட பேரணி எலப்பாக்கம் சாலை, பெரியார் நகர், வரதாரெட்டி காலனி, ஓம்சக்தி நகர், தேசிய நெடுஞ்சாலை சென்று பேரூராட்சி அலுவலகம் வந்தது. இதில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் கொடுத்தனர். தெரு முனை நாடகம் நடத்தினர். மனித சங்கிலி நடத்தப்பட்டது. பேரணியில், பேரூராட்சி துணைத் தலைவர் சீனுவாசன், தலைமை ஆசிரியர் சிவமூர்த்தி, செயல் அலுவலர் கேசவன், கவுன்சிலர்கள் ரமேஷ், உஷா, சாந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.