கேரளாவில் கனமழை நிலச்சரிவால் 7 பேர் உயிரோடு புதைந்தனர்
கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள புல்லரம்பரா மற்றும் கூடன்சேரி ஆகிய கிராமங்களில் நேற்றிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. புல்லரம்பராவில் வீடு இடிந்து இரண்டு குடும்பங்களை சேர்ந்த 7 பேர் உயிரோடு புதைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 3 வயது குழந்தை உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் பழசி அணை திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்று கரையோரம் உள்ள வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.