Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2012
05
Aug
மாணவியின் உடைகளை களைந்து சோதனையிட்ட ஆசிரியைகள் கைது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சூரி :மேற்கு வங்க மாநில பள்ளியில் ரூ.150 திருடியதாக கூறி, மாணவியை உடைகளை களைந்து சோதனையிட்ட 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம், சூரியில் உள்ள பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவி நிகிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று முன்தினம் நிகிதாவுடன் படிக்கும் மாணவி வைத்திருந்த 150 ரூபாய் காணாமல் போனது. நிகிதாதான் திருடிவிட்டதாக மற்ற மாணவிகள் குற்றம் சாட்டினர். தான் திருடவில்லை என்று எவ்வளவோ கூறினாள் நிகிதா. ஆனால் மாணவிகள் நம்பாமல் ஆசிரியைகளிடம் புகார் கூறினர். இதையடுத்து சய்தாலி குப்தா மற்றும் லிபிகா ஆகிய ஆசிரியைகள் மாணவியை தங்கள் அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு மற்ற ஆசிரியைகள் முன்னிலையில் நிகிதாவின் உடைகளை அவிழ்த்தனர். நிகிதா எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் விடவில்லை. உடைகளை களைந்து சோதனையிட்டதில் மாணவியிடம் பணம் எதுவும் இல்லை என தெரிந்தது. அநியாயமாக தன் மீது திருட்டு பட்டம் கட்டிய அவமானத்தில் மாணவி அழுதபடியே இருந்தாள். அழுது அழுது வீங்கி போன முகத்துடன் வீட்டுக்கு வந்தவளிடம் பெற்றோர் விசாரித்தனர். பள்ளியில் நடந்ததை சொல்லி கதறினாள் நிகிதா. கொதித்து போன பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். ‘பணத்தை எடுக்கவில்லை என என் மகள் கதறியும் ஆசிரியைகள் விடவில்லை. இந்த அதிர்ச்சியில் இருந்து அவள் மீளவில்லை. பள்ளி செல்லவே மாட்டேன் என்கிறாள்Õ என பெற்றோர் கூறினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 ஆசிரியைகளையும் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி முதல்வர் மீது செக்ஸ் புகார்: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்ட காலியாசக் பகுதியில் மாணவிகள் தங்கி படிக்கும் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளி முதல்வர் நப்ஜித் ஷேக் மீது விடுதி மாணவிகள் செக்ஸ் புகார் கூறியுள்ளனர். எந்த மாணவிக்காவது உடல்நிலை நிலை சரியில்லை என்றால் அந்த மாணவியின் அறைக்குள் செல்லும் ஷேக், மருந்து என மதுவை கொடுத்து அவளிடம் தவறாக நடப்பார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மாணவிகள் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
karthikraja - tirupur
8/6/2025 -- 4:28:11

மேற்கு வங்கலாம் ஆசிரியர்களை ஜாமீனில் விட்டது மிகவும் தவறான செயல்.அவர்களுக்கு தண்டனை கடுமையாக கொடுத்தால்தான் இனியும் இப்படி ஒரு இழிவான செயல் நடக்காமல் இருக்கும் .

shanmugam - Chennai
8/6/2025 -- 13:19:16

இது போன்ற செயல் இனி நடக்காமல் இருக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Jameel - chennai
8/6/2025 -- 14:2:21

இது வன்மையாக கண்டிக்க வேண்டும்

sathiyarajp - chennai
8/6/2025 -- 14:29:36

மேற்கு வங்கலாம் ஆசிரியர்களை ஜாமீனில் விட்டது மிகவும் தவறு . அவர்களை துக்கிலே போடவேண்டும்9629717938

சபரிஸ்வரன் - வேலூர்
8/6/2025 -- 21:20:21

இதுபோன்ற ஆசிரியர்களை தூக்கிலிட வேண்டும்

Prabhu - Hosur
8/6/2025 -- 21:22:6

Thandanai kadumaya erundhadhan thavarugal kurayum ,so nama nam naatil karunai adipadail mannippu koduppadhal dhan eanna thavaru seithalum velila vandhudalamnu asatu thairiyathoda seiranga ,teachers eppudi erundha student eappudi nalla palakavakatha kathukkamudiyum kadumaya thandikanum.

M.Sridhar - Chennai
8/7/2025 -- 7:42:1

This is very sencitive isscue

SANJAY - DHARMAPURI
8/7/2025 -- 8:49:44

சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.

bala - bangalore
8/7/2025 -- 12:25:52

இது போன்ற ஆள்களை நல்ல தண்டனை செய்ய வேண்டும்

seelan - coimbatore
8/7/2025 -- 12:48:35

மாதா பிதா அடுத்து குரு என்பதை ஆசிரியர்கள் மறந்து விடுகிறார்கள்

செந்தில் - நாகை
8/7/2025 -- 13:49:9

அந்த ஆசிரியையும் அவ்வாரே செய்ய வேண்டும்

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement