Untitled Document
2011
09
Mar
விண்வெளிதுறையில் ஆராய்ச்சி படிப்பு


இந்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் செயல்படும்  பிசிக்கல் ரிசர்ச் லேபரட்டரியில்  பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அஸ்ட்ரானமி, அஸ்ட்ரோ பிசிக்ஸ், சோலார் பிசிக்ஸ், பிளானட்டரி சயின்சஸ், ஜியோ சயின்சஸ், ஸ்பேஸ் அண்ட் அட்மாஸ்பெரிக் சயின்சஸ், எக்ஸ்பெரிமன்டல் லேசர் அண்ட் அடாமிக் பிசிக்ஸ், தியரிட்டிக்கல் பிசிக்ஸ் ஆகிய துறைகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளலாம்.

இயற்பியல், விண்வெளி அறிவியல், அட்மாஸ்பெரிக் சயின்சஸ், வேதியியல் (பிசிக்கல்/நியூக்ளியர்/அனலிடிகல்), ஜியாலஜி, ஜியோபிசிக்ஸ், ஓஷன் சயின்சஸ் ஆகிய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் எம்எஸ்சி படிப்பை முடித்தவர்கள் இந்த ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள தகுதியுடையவர்கள். இளங்கலை பட்டப்படிப்பில் இயற்பியல், கணித பாடங்களை கண்டிப்பாக படித்திருக்க வேண்டும். இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் 31.12.2024 தேதிப்படி 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் அவசியம். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். JEST 2011, GATE (in Physics/ GeoPhysics) 2010/2011, UGCCSIR NETJRF in June or December 2010 ஆகிய ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

இப்படிப்புக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல் ஆண்டில் மாதந்தோறும் ரூ.1600, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.1800 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். இப்படிப்பில் சேர விரும்புபவர்கள்  www.prl.res.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதர விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me