சென்னை, & சென்னை கலெக்டர் ஜெயந்தி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் சார்பில் 2012&ம் ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண் (கட் ஆப் மார்க்) மாணவர்கள் 1069ம் அதற்கு மேலும், மாணவிகள் 1082ம் அதற்கு மேலும் பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம்மாறிய கிறித்துவ மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் தகுதி பரிசு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டு ஒன்றுக்கு ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் உயர்த்தப்பட்ட தொகையான ரூ.3 ஆயிரம் வீதம் தொடர்கல்வி படிப்பு முடியும் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிப்போர் தமிழ்மொழியை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். தொடர்கல்வியை சென்னை மாவட்டத்தை சேர்ந்த கல்வி நிலையத்தில் படிக்க வேண்டும்.
இந்த தகுதியுடைய மாணவ, மாணவிகள் தங்களுடைய மதிப்பெண் மற்றும் சாதி சான்று நகல்கள், அத்தாட்சி செய்து விண்ணப்பத்துடன் கல்வி நிலைய தலைவரின் முகப்பு கடிதத்துடன், ‘மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், கலெக்டர் அலுவலகம், சிங்காரவேலர் மாளிகை, ராஜாஜி சாலை, சென்னை&1’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 2011&12ம் கல்வி ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் முதல்வரின் தகுதி பரிசு தொகையை பெற்று, தொடர்ந்து புதுப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் உயர்த்தப்பட்ட தொகையான ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook