தண்டையார்பேட்டை: சென்னை ராயபுரம் ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் லூர்து மார்ட்டின் (48). மனைவி ஜான்சி (45). இவர்களது மகள் புளோரா (22). தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு புளோரா மாயமானார். எங்கு தேடியும் கிடைக்காததால் ராயபுரம் போலீசில் லூர்து மார்ட்டின் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். புளோராவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிவர்மா (27) என்பவருக்கும் காதல் இருந்தது. மணிவர்மாவும் மாயமாகிவிட்டார். இருவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை புளோரா, தனது காதலன் மணிவர்மாவை திருமணம் செய்து கொண்டு ராயபுரம் போலீசில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து இரு தரப்பு பெற்றோரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, புளோரா பெற்றோருக்கும், போலீசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து புளோராவின் உறவினர்கள், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பானது. இந்நிலையில், போலீ சார் தங்களை தாக்கியதாக புளோராவும், அவரது தம்பி லாரன்சும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook