சென்னை :மாற்றுத் திறன் மாணவ, மாணவியர் நூல்களை படிக்க உதவும் கருவி 500 பேருக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிகளில் படிக்கும் பார்வை திறன் குறையுடைய மாற்றுத் திறன் மாணவ, மாணவியர் உரிய பாட நூல்கள் படிப்பதற்கு வசதியாக எழுத்துக்களை பெரிதாக்கி சுயமாக படிக்க உதவும் கருவியை (Magnifier) 50 லட்சம் ரூபாய் செலவில் 500 மாணவ, மாணவியருக்கு வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். பார்வைத் திறன் குறையுடைய மாற்றுத் திறன் மாணவ, மாணவியர் பாடநூல்கலை பெரிதாக்கி படிக்கக்கூடிய கருவியை கணினி, மடிக்கணினி மற்றும் தொலைக்காட்சி போன்றவற்றில் பொருத்தி எளிதாக படிக்க இயலும். இதன் மூலம் பார்வை குறைவான மாணவ, மாணவியர் அந்த குறை தெரியாமல் படிப்பில், அறிவில் மற்றவர்களுக்கு இணையாக மேலோங்க இயலும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook