சென்னை : கன்னட ஹீரோவுடன் நடிக்க நேரமில்லை என்றார் டாப்ஸி. இதுபற்றி அவர் கூறியதாவது: கன்னட படத்தில் நான் நடிப்பதாக செய்தி வருகிறது. உண்மையில் நான் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். மற்ற எந்த மொழி யிலும் நடிக்க எனக்கு நேரமில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் கன்னட முன்னணி நடிகர்கள் சிலருடன் நடிக்க ஒன்றிரண்டு டைரக்டர்கள் என்னிடம் கால்ஷீட் கேட்டார்கள். அவர்கள் பெயர் எனக்கு ஞாபகமில்லை. ஆனால் இப்போதுள்ள நிலையில் அந்த படங்களை ஏற்கும் நிலையில் நான் இல்லை. தமிழ் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். அதேபோல் தெலுங்கில் கிளாமருடன் கூடிய வேடங்கள் ஏற்கிறேன். தெலுங்கு படங்களில் அதிக சம்பளம் தருவதால்தான் கிளாமராக நடிப்பதாக சிலர் என்னைபற்றி விமர்சிக்கிறார்கள். கதைக்கு ஏற்பத்தான் நான் நடிக்கிறேன். கமர்ஷியல் சினிமாவில் கிளாமர் தவிர்க்க முடியாது. தமிழிலும் கிளாமராக நடிக்க மறுப்பதில்லை. ஸ்கிரிப்டுக்கு ஏற்பத்தான் இயக்குனர்களும் கதாபாத்திரங்களை அமைக்கிறார்கள். இவ்வாறு டாப்ஸி கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook