சென்னை :பொறியியல் கல்லூரி மாணவர் ஒருவர் உளவு பிரிவின் கையில் சிக்கி தவிக்கும் நிஜ கதை படமா கிறது. புதுமுக நடிகர் பாரீஸ், நடிகைகள் சாரு, ரோஸின், ஜோதி நடிக்கும் படம் ‘சுழல்‘. எழுதி இயக்குகிறார் ஆர்.ஜெயகுமார். அவர் கூறியதாவது: பொறியியல் கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்கள் அவர்களது தோழிகள் வாழ்க்கையை ஜாலியாக அனுபவிக்கின்றனர். இவர்களில் ஒரு மாணவர் யதார்த்தமாக ஒருவருடன் பழகுகிறார். அந்த நபருக்கோ சர்வதேச தீவிரவாத கும்பலுடன் தொடர்பு இருக்கிறது. இந்தியாவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி பொருளாதாரம், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க சர்வதேச கும்பலுக்கு அந்த நபர் உதவுகிறார். ஆனால் இது மாணவருக்கு தெரியாது. என்ன நடக்கிறது என்று தெரியாமலே போலீஸ் கண்காணிப்பில் மாணவர் சிக்கிக்கொள்கிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பது கதை. உண்மை சம்பவத்தில் கற்பனை கலந்து ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டது. இதில் துப்பறியும் அதிகாரியாக அதுல் குல்கர்னி, தீவிரவாத கும்பல் தொடர்புடையவராக பிரதாப் போத்தன் நடிக்கின்றனர். ஹீரோ பாரீஸ். மற்றும் நிழல்கள் ரவி, நீரஜ், சாருலதா, சரிதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அமெரிக்கா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு நடிகர்களும் நடிக்கின்றனர். எல்.வி.கணேசன் இசை. ஜேம்ஸ் கிறிஷின் ஒளிப்பதிவு.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook