சென்னை :திரைப்பட, டி.வி. நடிகர், நடிகைகளுக்கு மத்திய அரசு சேவை வரி விதித்ததற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நடிகர், நடிகைகள் திடீர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். சினிமா மற்றும் டி.வி. நடிகர், நடிகைகள் தங்களது சம்பளத்தில் 12.3 சதவீதம் சேவை வரி (சர்வீஸ் டேக்ஸ்) ஜூலை 1ம் தேதி முதல் கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு நடிகர், நடிகைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. கோலிவுட் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் உள்ளிட்ட வட இந்திய நட்சத்திரங்களும் சேவை வரி எதிர்த்து போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதுபற்றி பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது,‘இது தோள் மீது சுமை ஏற்றும் வரி. நடிகர், நடிகைகளின் உழைப்பை அரசு உறிஞ்ச பார்க்கிறது‘ என்று குறிப்பிட்டிருக்கிறார். பெயர் குறிப்பிட விரும்பாத சில நடிகர்கள்,‘சேவை வரி என்ற பெயரில் அரசு, நடிகர்களிடம் அவர்களின் வருமானத்தை கொள்ளை அடிக்க பார்க்கிறது‘ என்று கூறினர்.
இதுபற்றி நிதிதுறை வல்லுனர்கள் கூறும்போது,‘சினிமா மற்றும் டிவி நடிகர், நடிகைகளுக்கு ஜூலை 1ம் தேதி முதல் சேவை வரி அமலுக்கு வருகிறது. இதனால் தயாரிப்பு செலவு அதிகரிக்கும். சேவை வரி விதிப்பின்படி நடிகர்கள் ரூ.10 கோடி சம்பளம் வாங்கினால் அவர் ரூ. 1 கோடியே 23 லட்சம் சேவை வரி கட்ட வேண்டும். அதேசமயம் ரூ. 10 லட்சத்துக்கு குறைவாக சம்பளம் வாங்கும் கலைஞர்கள் சேவை வரி கட்ட வேண்டியதில்லை’ என்றார். இதுபற்றி தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது,‘சேவை வரி விதிப்பால் நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தை உயர்த்தும் நிலை உருவாகி உள்ளது. இந்த சுமை முழுவதும் தயாரிப்பாளர்கள் மீதுதான் விழும். எனவே இந்த வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று பிலிம்சேம்பர் மூலம் மத்திய அரசுக்கு முறையிட உள்ளோம்Õ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook