சென்னை : கார்த்திகா நடிக்க மறுத்து வெளியேறிய படத்தில் பிந்து மாதவி நடிக்கிறார். ‘கோ கார்த்திகா அடுத்து ‘சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடிக்க இருந்தார். இதில் பிரபு மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. திடீரென்று விக்ரம் விலகினார். அவருக்கு பதிலாக புதுமுக நடிகர் தமன்குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு கார்த்திகா தயங்கினார். மேலும் ஸ்கிரிப்ட்டிலும் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து படத்திலிருந்து விலகுவதாக தெரிவித்தார். கார்த்திகாவுக்கு பதிலாக வேறு நாயகியை தேடும் வேலை நடந்தது. ‘கழுகுÕ, ‘வெப்பம்Õ படங்களில் நடித்த பிந்து மாதவியிடம் கதையை கூறியபோது அவர் ஓ.கே சொன்னார். இதையடுத்து கார்த்திகாவுக்கு பதிலாக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதன் ஷூட்டிங் மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. போலீஸ் வேடத்தில் ரீமா சென் நடிக்கும் காட்சிகளை இயக்குனர் சினேகா படமாக்கி வருகிறார். ஏற்கனவே ரீமா, விக்ரம் பிரபு நடித்த காட்சிகள் படமாகி இருந்தன. விக்ரம் விலகியதையடுத்து ரீமாவின் காட்சிகள் புதுஹீரோ தமனுடன் ரீ ஷூட் செய்யப்படுகிறது. ஆயிரத்தில் ஒருவன்‘ படத்துக்கு பிறகு தனது மார்க்கெட் உயரும் என்று நினைத்த ரீமா சென்னுக்கு புதிய படங்கள் எதுவும் வராததால் ஏமாற்றத்துடன் இருந்தார். இதற்கிடையில் திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில்தான் ‘சட்டம் ஒரு இருட்டறை ரீமேக்கில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook