சென்னை :தெலுங்கு படத்தில் காமெடி கலந¢த வேடத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். 7ஆம் அறிவு படத்தில் மருத்துவ கல்லூரி மாணவி, 3 படத்தில் பள்ளி மாணவி என வரிசையாக மாணவி மற்றும் காதலி வேடங்களில் நடித்தார் ஸ்ருதி ஹாசன். இதற்கிடையில் தெலுங்கில் மாறுபட்ட வேடங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் ரவி தேஜா ஜோடியாக ‘பலுபுÕ என்ற படத்தில் காமெடி ஹீரோயினாக நடிக்கிறார். இதுபற்றி ஸ்ருதி ஹாசன் கூறியதாவது: ரவி தேஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறேன். இதுவரை காதலி, மாணவி என கிளாமர் கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன். இப்படம் மூலம் புதிய பரிமாணத்திற்கு மாறுகிறேன். முதன்முறையாக காமெடியாக நடிக்கிறேன். இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிப்பது இதுதான் முதல்முறை. டான் சீனு கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். தமன் இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் பாடல் பதிவுடன் இம்மாதம் தொடங்குகிறது. இந்த வேடத்தில் நடிப்பதுபற்றி இப்போதே பலரும் பல கருத்து தெரிவிக்கிறார்கள். அதை கவனத்தில் கொண்டிருக்கிறேன். இந்த வேடத்திற்கு நான் பொருத்தமாகவே இருக்கிறேன் என்பதை படம் ரிலீஸ் ஆகும்போது அவர்கள் உணர்ந்துகொள்வார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook