பண்ருட்டி: எட்டாம் வகுப்பு மாணவியை காதலிக்க சொல்லி செல்போனில் ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ராயர்பாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி (13), அங்குள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த கூலி வேலை செய்து வரும் சிறுவன் (15), மாணவியிடம் கடந்த 2 மாதமாக செல்போனில் ஆபாசமாக பேசி டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்து உள்ளார்.
இதுபற்றி மாணவி, தன் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார். நேற்று முன்தினம் மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கையைப் பிடித்து இழுத்து சென்ற சிறுவன், ‘‘நீயில்லாமல் நானில்லை, நீ என்னை காதலிக்காவிட்டால் செத்துவிடுவேன்’ என்று உருகி உருகி டார்ச்சர் செய்துள்ளார். மாணவியின் பின்னாலேயே வந்த அவரது உறவினர்கள், சிறுவனை பிடித்து செம மாத்து மாத்தினர். பின்னர் அவரை புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook