பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் அமெரிக்காவின் செரீனா முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். இந்நிலையில் அவரது சகோதரி 2வது சுற்றில் போலந்தின் அக்னீஸ்கா ரந்த்வன்ஸ்காவிடம் 26, 36 என்ற நேர்செட்டில் தோல்வி அடைந்தார். செர்பியாவின் அனா இவானோவிக் 62, 62 என்ற நேர்செட்டில் இஸ்ரேலின் ஷகர்பீரையும், குஸ்னட்சோவா (ரஷ்யா) 64, 76 என்ற கணக்கில் சீன தைபேயின் யங்க்ஜனையும் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினர். ஆண்கள் பிரிவில் நம்பர்ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிக் 60, 64, 64 என்ற நேர்செட்டில் சுலோவேனியாவின் கவுசிக்கையும், சுவிட்சர்லாந்தின் ரோஜர்பெடரர் 63, 62, 67, 63 என்ற கணக்கில் ருமேனியாவின் அட்ரியன் உங்குரையும் வீழ்த்தி 3வது சுற்றில் நுழைந்தனர். கலப்பு இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் லியாண்டர்பயஸ் (இந்தியா) எலினா வெஸ்னினா (ரஷ்யா) ஜோடி 61, 61 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் செர்மாக் லூசி ஹெராடெக்கா ஜோடியை தோற்கடித்தது. ரோகன்போபண்ணா (இந்தியா) லிசா ரேமன்ட் (அமெரிக்கா) ஜோடி 67, 64, 410 என்ற செட் கணக்கில் போராடி பால்ஹேன்லி (ஆஸி.) நதாலி (தெ.ஆ.) ஜோடியிடம் தோல்வியடைந்தது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook