| |||||
|
2011
02
Mar முந்தைய கால கட்டங்களை போல் இல்லாமல் சட்டம் படிக்க கல்வி முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. சட்ட பல்கலைக்கழகங்கள், சட்டக்கல்லூரிகள் அனைத்து மாநிலங்களிலும் எண்ணிக்கையில் பரவலாக்கப்பட்டு சட்டக்கல்வி வழங்கப்படுகிறது. பிளஸ் 2 படித்தாலே போதும் என்ற அளவுக்கு அடிப்படை தகுதி நிலையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா சட்ட பல்கலைக் கழகத்தில் 5 வருட ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு நடத்தப்படுகிறது. BA, LLB என்றழைக்கப்படும் இப்படிப்பில் சேர முதற்கட்டமாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய சட்டப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் CLAT2011 நுழைவுத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. www.apulvisakha.org என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ளவாறு பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழின் நகல் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழின் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி, கல்விக்கட்டணம், விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் சில
|
|