இளம்பெண்ணை கிண்டல் செய்த பேன்சி கடை உரிமையாளர் கைது
ஆவடி: இளம்பெண்ணை கிண்டல் செய்த பேன்சி கடைக்காரரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆவடி விவேகானந்தா நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கிரேஷ்பாலிஷ். இவரது மகள் ஆன்னி ஜெபி (21). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் தெருவில் நடந்துவந்தார். அப்போது ஒரு வாலிபர் அவரை மறித்து கிண்டல் செய்துள்ளார். இதை பெற்றோரிடம் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். ஆவடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். ஆவடி ஏஜிடி நகர் முதல் தெருவை சேர்ந்த பாலாஜியை (32) நேற்று கைது செய்தனர். பேன்சி ஸ்டோர்ஸ் வைத்துள்ள இவர்தான் ஆன்னியை மிரட்டியுள்ளார். அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.