கோவை: மூன்று கோடி ரூபாய் மோசடி செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் முரளி(57). கோவை புலியகுளம் இந்தியன் வங்கி கிளையில் 2003 முதல் 05ம் ஆண்டு வரை மேலாளராக இருந்தார். அப்போது கட்டிட ஒப்பந்ததாரர்கள், அரசு ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்களுக்கு வீடுகள் கட்ட கடனுதவி ஏற்பாடு செய்து தருவதாக கூறி, போலி ஊதிய சான்று தயாரித்து ரூ.3.25 லட்சம் முதல் 8.25 லட்சம் வரை கடன் பெறப்பட்டது. ஒப்பந்ததாரர்கள் அளித்த வீட்டு கடன் விண்ணப்பத்தை உடனடியாக அனுமதித்ததோடு, ஒரே நாளில் வங்கி மேலாளர் முரளி, கடனும் அளித்துள்ளார். 71 பேரின் பெயரில் முறைகேடாக கடனுதவி அளிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு வீட்டுடன் கூடியமனையை இலவசமாக அளித்துள்ளதாக தெரியவந்தது. ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.
தற்போது, சென்னை வடபழனி இந்தியன் வங்கி கிளையில் மேலாளராக பணிபுரிந்துவந்த முரளியை கோவை மாநகர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். ஒப்பந்ததாரர்கள் வெங்கடாசலம், டென்ஸ்டன் ராஜா, பெரியசாமி, வசந்தா ஆகியோரை தேடிவருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook