* ‘தடையற தாக்க ஹீரோயின் மம்தா மோகன்தாஸ் பஹ்ரைனில் இருந்ததால், அப்படத்தின் பாடல் கேசட் விழாவுக்கு வரவில்லை. அங்கிருந்தபடியே இன்டர்நெட்டில் பாடல்களை கேட்டு இயக்குனர் மகிழ் திருமேனியை டுவிட்டரில் பாராட்டி இருக்கிறார். * ‘மத கத ராஜா படத்தின் ஷூட்டிங்கை விஷால், சதா நடித்த குத்துப்பாடலுடன் தொடங்கிய சுந்தர்.சி., விரைவில் விஷால், சந்தானம் நடிக்கும் காட்சிகளை படமாக்குகிறார். * காஜல் அகர்வால் தங்கை நிஷா அகர்வால் நடித்துள்ள ‘இஷ்டம் விரைவில் திரைக்கு வருகிறது. ஏற்கனவே 2 தெலுங்கு படங்களில் நடித்துள்ள நிஷா, அடுத்து ‘அலைஸ் ஜானகி என்ற படத்தில் நடிக்கிறார். * ‘நான் அவன் இல்லை 2 படத்தில் நடித்த சுவேதா மேனன், மலையாள படமொன்றில் லால் காதலியாக நடித்தார். தற்போது புதிய படத்தில் லாலுக்கு அம்மாவாக நடிக்க உள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook