டிஜிட்டல் விளம்பர போர்டுகளை அகற்ற கோரி போலீசில் புகார்
தண்டையார்பேட்டை :தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டையில் வைக்கப்பட்டு உள்ள டிஜிட்டல் விளம்பர போர்டுகளை அகற்ற வேண்டும் என்று போலீசில் டிராபிக் ராமசாமி புகார் கொடுத்தார். விளம்பர போர்டுகள் வைக்க சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. ஆனாலும் சென்னை நகரின் பல இடங்களில் டிஜிட்டல் போர்டுகள் வைக்கப் பட்டு, அகற்றப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் பொதுநல சேவகர் டிராபிக் ராமசாமி ஆர்கேநகர் போலீசில் நேற்று இரவு புகார் கொடுத்தார். அதில் ஆர்கேநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய இடங்களில் பல இடங்களில் விளம்பர டிஜிட்டல் போர்டுகள், அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் போர்டுகள் அகற்றப்படாமல் இருக்கிறது. அவற்றை உடனே அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தார். இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி புகாரை பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.