புதுச்சேரி :புதுவை மாநில காவல்துறை புதிய ஐஜியாக ரன்வீர் சிங் கிருஷ்ணய்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதுவை ஐஜி ஏ.கே. சர்மா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் அருணாசல பிரதேச மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக டெல்லியில் பணியாற்றி வரும் ரன்வீர் சிங் கிருஷ்ணய்யா புதுச்சேரி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், 1989ம் ஆண்டு பேட்ஜில் பணியில் சேர்ந்தவர். விரைவில் இவர் பொறுப்பேற்க உள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook