தமிழக முன்னேற்ற காங்கிரஸ் புதிய கட்சி துவக்கம்
சென்னை :காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த எஸ்.அருள்தாஸ், தமிழக முன்னேற்ற காங்கிரஸ் என்ற புதிய கட்சியை துவக்குகிறார். 7ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கட்சியின் துவக்க விழா நடக்கிறது. இந்த விழாவிற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ்.அருள்தாஸ் தலைமை வகிக்கிறார். மாநில துணைத் தலைவர் சிம்சுமாரபூபதி முப்புளி, பொதுச்செயலாளர் ஏ.நியாஸ் அகமத் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். துணை பொதுச்செயலாளர் எம்.புருஷேஷ்வரன், துணைத் தலைவர் பண்டிட் கோகுல் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்துகின்றனர். முன்னாள் கூடுதல் காவல்துறை இயக்குனர் பி.தங்கராஜ், ஸ்டேட் பேங்கில் கூடுதல் ஜெனரல் மேனேஜராக பணியாற்றி ஓய்வு பெற்ற வி.செல்வராஜ், தமிழக மக்கள் கட்சியின் நிறுவனர் கோபிநாராயணன் யாதவ், ஜெ.பாலகோபால் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்குகின்றனர். வடசென்னை மாவட்ட தலைவர் தேசிகமூர்த்தி, திருவள்ளுர் மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் நன்றி கூறுகின்றனர்.