தண்டையார்பேட்டை :வண்ணாரப்பேட்டையில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் செல்போன், ஏடிஎம் கார்டு, பணம் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் சுனிதா (34). பெங்களூரில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறார். சென்னை வந்த இவர், கடந்த வாரம் சோலையப்பன் தெருவில் நடந்து சென்ற போது, அவரது கையில் வைத்திருந்த பர்ஸை பைக்கில் வந்த ஆசாமிகள் பறித்து சென்றனர். அதில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ஏடிஎம் கார்டு, ரூ.500 பணம் ஆகியவை பறிபோனது. இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசில் சுனிதா புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன், எஸ்.ஐ. இசக்கி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் வ.உ.சி. நகரை சேர்ந்த லோகேஷ் (22), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பார்த்தசாரதி (18) ஆகியோரை பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில், அவர்கள்தான் சுனிதாவிடம் பர்ஸ் திருடினார்கள் என்பது தெரிய வந்தது. இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook