செங்கல்பட்டு :செங்கல்பட்டில் அடுத்தடுத்து நடந்து வரும் கொலையால் மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் ரவுடிகளின் பட்டியல் ஒன்றை போலீசார் தயாரித்துள்ளனர். அதன் மூலம் அவர்களது நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர். செங்கல்பட்டில் கடந்த ஜனவரி முதல் நகரமன்ற துணைத் தலைவர் ரவிபிரகாஷ், தேமுதிக நகர செயலாளர் சுரேஷ், ஆட்டோ டிரைவர் சீதாபதி, தேமுதிக பிரமுகர் சந்துரு மற்றும் தயாளன், டாஸ்மாக் கடையில் வேளாங்கண்ணி உள்ளிட்ட 7 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து நடந்து வரும் இந்த கொலையால் பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர். போலீசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதையடுத்து ரவுடிகளின் கொட்டத்தை அடக்க மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள், கொலை, கொள்ளை, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் சிக்கிய பழைய குற்றவாளிகள் 400க்கும் அதிகமானோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதிரடிப்படை போலீசாரை வைத்து செங்கல்பட்டு நகரம் முழுவதும் 2 வாரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருகிறது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. மனோகரன் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு நகரத்தில் உள்ள பழைய கொலையாளிகளின் பழக்க வழக்கங்கள், தொழில் உள்ளிட்டவற்றை கண்காணிக்க தொடங்கினர். அதன் ஒரு முயற்சியாக இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் ரவுடிகளின் பட்டியல் தயாரித்துள்ளனர். இதில், 26 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களது குடும்ப பின்னணி, முகவரி, யார் யாருடன் செல்போனில் பேசுகிறார்கள் என்பது குறித்தும் தகவலை சேகரித்து வருகின்றனர். இதற்காக 5 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம¢ கொலையாளிகள் பிடிபடலாம் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook