ஒரு ஆண்டாக கோமாவில் தள்ளி : மனைவியை அநியாயமாக கொன்று விட்டனர்
நாகர்கோவில் :நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி அருகே உள்ள செம்பொன்விளையை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ருக்மணி (34). கடந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி, கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ருக்மணிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது ஆக்ஸிஜன் சிலிண்டருக்கு பதில், நைட்ரஸ் ஆக்ஸைடு சிலிண்டர் பொருத்தினர். இதனால் ருக்மணி கோமா நிலைக்கு சென்று விட்டார். கோமா நிலையில் இருந்த ருக்மணி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் நேற்று இறந்தார். பிரேத பரிசோதனை முடிந்து இன்று காலை வேலூரில் இருந்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது. ருக்மணியின் கணவர் கணேசன் கூறியதாவது : அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் கவனக்குறைவால் எனது மனைவியை கொன்று விட்டனர். அவர்கள் மீது கொலை வழக்குபதிவு செய்ய வேண்டும். எனது இரு குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விட்டது. அரசு மருத்துவமனையை நம்பி போன எங்களுக்கு இந்த பரிதாப கதி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் டாக்டர்களின் அலட்சியத்தால்தான் நடந்துள்ளது. சம்பவத்தன்று சிகிச்சை அளிக்க வேண்டிய டாக்டர் எங்கு இருந்தார்? என்பதையும் முறையாக விசாரிக்க வேண்டும்.