Untitled Document
2012
05
May
புதுமுகங்கள் விஐபிக்களை அணுக முடியாது இயக்குனர் வருத்தம்


புதுமுகங்களால் விஐபிக்களை அணுக முடியாது என்றார் இயக்குனர். விகாஷ்,சுவாசிகா நடிக்கும் படம் ‘கண்டதும் காணாததும்’. இப்படம் பற்றி இயக்குனர் சீலன் கூறியதாவது:
மனிதனின் புறத்தோற்றத்தை காண முடியும். அவனது மனதை காண முடியாது. புறத்தோற்றதை வைத்து யாரையும் எடை போட முடியாது  என்பதுதான் கதை. எங்கள் படக்குழு புதியது. இதனால் விஐபிக்களை அணுகி பட பாடல் கேசட் வெளியிட அழைக்க முடியவில்லை. விஐபிக்களை அழைக்க இன்னொரு விஐபி தேவைப்படுகிறார். இதை குறையாக சொல்லவில்லை. ஆனால் விஐபிக்களுக்கான இடத்தை புதுமுகங்களும் பெறுவார்கள்.   

விஐபிக்களுக்கு பதிலாக வில்லிவாக்கம் அன்பு இல்லத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை வரவழைத்தோம். அந்த இல்லத்தை நடத்தும் பெண்மணி ஒன்றரை வயதாக இருக்கும்போது அனாதையாக விடப்பட்டவர். அவரை இன்னொருவர் எடுத்து வளர்த்தார். தன்னைப்போல் அனாதை குழந்தைகளுக்கு ஆதரவு தரவே இந்த இல்லத்தை அவர் நடத்துகிறார். இவர்கள் விழாவில் கலந்துகொண்டு கேசட்டை வெளியிட்டனர். அந்த குழந்தைகளுக்கு உடைகளும், இல்லத்துக்கு கம்ப்யூட்டரும் வழங்கினோம். இப்பட பாடல் கேசட் விற்பனையில் கிடைக்கும் பணமும் ஆதரவற்ற இல்லத்துக்கு வழங்கப்படுகிறது. வி.ஏ.சார்லி இசை. வின்சி,பாஸ்கி ஒளிப்பதிவு. சங்கர நாராயணன் தயாரிப்பு.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,