Untitled Document
2012
05
May
காதல் பிரச்னையில் சிக்கிய மீரா மீண்டும் நடிக்க வருகிறார்


காதலர் மாண்டலின் ராஜேஷுடன் பிரச்னை ஏற்பட்டதால் நடிக்காமல் ஒதுங்கி இருந்த மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிக்க வருகிறார். Ôரன்Õ, Ôசண்ட கோழிÕ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் மீரா ஜாஸ்மின். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கும் மாண்டலின் ராஜேஷுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தெரிவித்தனர். ஆனால் திடீரென இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து திருமண பேச்சு நின்றுவிட்டது. சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார் மீரா. கடைசியாக வினயன் இயக்கிய ‘மொஹபத்Õ என்ற படத்தில் நடித்தார். அது கைகொடுக்கவில்லை.

காதல் பிரச்னையால் கடந்த 1 ஆண்டாக எந்த படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கதை கூற இயக்குனர்கள் போன் செய்தாலும், நேரம் ஒதுக்க மறுத்து வந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறார் மீரா. சகோதரிகள் 3 பேரில் இளம்பெண் மானப்பங்கபடுத்தப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘அச்சுனரங்கதா வீடுÕ என்ற படத்தை லால் ஜோஸ் இயக்கினார். இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. இப்படம் மூலம் மீரா ஜாஸ்மின் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிறார். மானபங்கப்படுத்தபட்ட பெண்ணாக வித்தியாசமான வேடத்தில் நடிக்க உள்ளார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,