ஜெயங்கொண்டம் :கணவனுக்கு ஜூஸில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்தார். திடீரென கணவன் கண்விழித்ததால், கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவி கொல்ல முயன்ற சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன்பேட்டையை சேர்ந்தவர் ஜெரால்டு வில்லியம்ஸ்(35). இவரது மனைவி விண்ணரசி(23). தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். விண்ணரசியும், மணிகண்டனின் மனைவியும் வரதராஜன்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளர்களாக உள்ளனர். இதனால் வில்லியம் சும், மணிகண்டனும் நண்பர்களாகினர். இருவரும் சேர்ந்து கீழ்நெடுவாய் கிராமத்தில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில் மணிகண்டனுக்கும், விண்ணரசிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதையறிந்த வில்லியம்ஸ், மனைவியை கண்டித்தார். இருந்தும் அவர்களுக்கிடையே கள்ளத்தொடர்பு நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த 2ம் தேதியன்று இரவு ஜெரால்டுக்கு விண்ணரசி லெமன் ஜூஸில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் ஜெரால்டு அசந்து தூங்கிவிட்டார். அதன்பின் மணிகண்டனை விண்ணரசி வீட்டுக்கு வரவழைத்தார். அங்கு கணவன் அருகில் தூங்கிக் கொண்டிருக்கும்போதே மணிகண்டனுடன் விண்ணரசி உல்லாசமாக இருந்துள்ளார். திடீரென ஜெரால்டு அரை மயக்கத்தில் விழித்தபடி முனகியுள்ளார். இதனால் இருவரும் சேர்ந்து தலையணையை முகத்தில் வைத்து அமுக்கி கொல்ல முயன்றுள்ளனர். அப்போது திமிரிகொண்டு ஜெரால்டு சத்தம் போட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன்வெளியே ஓடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வெளியில் ஓடிவந்தனர். அப்போது தப்பி ஓடிய மணிகண்டனை பிடித்து ஆண்டிமடம் போலீசில் ஒப்படைத்தனர். விஷயம் வெளியில் தெரிந்ததால் அவமானமடைந்த விண்ணரசி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார். அவர் ஆண்டிமடம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வில்லியம்ஸ் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook