ஊத்துக்கோட்டையில் திடீர் மழை : மரம், மின்கம்பம் முறிந்தன
ஊத்துக்கோட்டை :ஊத்துக்கோட்டையில் நேற்றிரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பம் உடைந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந் தது. பகலில் வெளியே தலைகாட்ட முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இன்று கத்திரி வெயில் தொடங்குகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றிரவு பரவலாக மழை பெய்தது. ஊத்துக்கோட்டையில் நேற்றிரவு 9 மணிக்கு சூறைக்காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த வேப்ப மரம் சூறைக்காற்றில் முறிந்து விழுந்தது. அலுவலகத்தின் ஓடுகள் உடைந்து நொறுங்கின. அங்குள்ள காந்தி சிலை யின் கண்ணாடியும் உடைந்தது. அம்பேத்கர் நகரில் இரும்பு மின் கம்பம் சாய்ந்து, வயர்கள் விழுந்தன. மின் சப்ளை துண்டிக் கப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. செல்லியம்மன் கோயில், தொம்பரம்மேடு பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. இன்று காலை வரை மின்சாரம் வரவில்லை.