Untitled Document
2012
04
May
திருநின்றவூர் ஜெயா கல்லூரியில் பட்டமளிப்பு விழா


திருவள்ளூர் :திருநின்றவூர் ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்லூரி தலைவர் பேராசிரியர் அ.கனகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் விஜயகுமாரி, துணைத் தலைவர் நவராஜ் முன்னிலை வகித்தனர். முதல்வர் தனராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் விஜயகுமார் வரவேற்றார். சென்னை பல்கலைக்கழக பதிவாளர் லியோ அலெக்சாண்டர் 455 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும் பரிசும் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கல்லூரி கல்விதான் ஒருவரை முழுமையான மனிதனாக மாற்றுகிறது. ஆளுமை திறன், தலைமைப் பண்பு, தகவல் தொடர்பு உள்பட பல்வேறு திறமைகளை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு கிடைத்த உடன் பெற்றோர்களை மறந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்ற 15 பேருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழக டீன் சீனிவாசன் வாழ்த்தி பேசினார். முடிவில் விரிவுரையாளர் சந்திரசேகர் நன்றி கூறினார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,