உளவுத்துறை டிஐஜியாக டேவிட்சன் நியமனம்
சென்னை :போதை பொருள் தடுப்பு பிரிவு டிஐஜியாக இருந்தவர் டேவிட்சன் தேவ ஆசிர்வாதம். இவரின் மத்திய அரசு பணி முடிவடைந்ததை அடுத்து மீண்டும் தமிழக பணிக்கு திரும்பினார். அவர், தமிழக உளவுத் துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை உள்துறை செயலாளர் ராஜகோபால் நேற்று பிறப்பித்தார். ஏற்கனவே உளவுத் துறை டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேல் மாற்றப்பட்ட பிறகு அந்த இடம் காலியாக இருந்தது.