ஐபிஎல்லில் நேற்று மும்பை , புனே அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன் எடுத்தது. சச்சின் 35 பந்தில் 4 பவுண்டரியுடன் 34 ரன்னும், பிராங்கிளின் 25, ரோகித் சர்மா 3, ராபின் பீட்டர்சன் 13, தினேஷ் கார்த்திக் 18, அம்பாதி ராயுடு 1, பெரேரா 0, ஹர்பஜன் சிங் 0, மலிங்கா 14, ஓஜா 1 ரன் எடுத்தனர். புனே தரப்பில் நெக்ரா, குமார் தலா 2, திண்டா 1 விக்கெட் வீழ்த்தினர். எளிதான இலக்குடன் ஆடிய புனே ரன் சேர்க்க கடுமையாக திணறியது. உத்தப்பா 18, ரைடர் 9, கிளார்க் 14, கங்குலி 16, ஸ்மித் 2 ரன்களில் வெளியேறினர். கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை முனாப் பட்டேல் வீசி னார். முதல் பந்தை மனாஸ் வீணடித்தார். 2வது பந்தில் ஒரு உதிரி கிடைத்தது. அடுத்து 3 பந்துகளில் தலா 1 ரன்கள் அடிக்கப்பட்டது. 5வது பந்தை குமார் பவுண்டரிக்கு விளாசி னார். கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது.
இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை த்ரில் வெற்றி பெற்றது. மனாஸ் 42, குமார் 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.மும்பை தரப்பில் மலிங்கா, ஹர்பஜன் சிங் தலா 2, ஓஜா, முனாப் பட்டேல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது மலிங்காவிற்கு வழங்கப்பட்டது. 17வது ஓவரில் கங்கு லியை மலிங்கா போல்டாக்கியது தான் திருப்புமுனையாக அமைந்தது. கடைசி 4 ஓவரில் 36 ரன் சேர்க்க வேண்டும் என்ற நிலையில் புனே அணி சுதாரித்து ஆடவில்லை. 19வது ஓவரை வீசிய மலிங்கா வெறும் 4 ரன்களை மட்டுமே கொடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார். கடைசி ஓவரை முனாப் அருமையாக வீசி வெற்றி கனியை பறித்தார். மும்பை அணிக்கு இது 6வது வெற்றியாகும். புனே 7வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி அரையிறுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய அனை த்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook