மர்ம கும்பல் துப்பாக்கி சூடு : நைஜீரிய சந்தையில் 38 பேர் பரிதாப பலி
அபுஜா :நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் யோப் மாகாணம். இங்குள்ள போடிஸ்கம் பகுதியில் மிகப்பெரிய கால்நடை சந்தை உள்ளது. இங்கு நேற்று மர்ம கும்பல் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. அத்துடன், சந்தையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். இதில் கால்நடைகள், வாகனங்கள் எரிந்து சாம்பலாயின. இந்த திடீர் தாக்குதலில் 38 பேர் பரிதாபமாக இறந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் சந்தைக்குள் திடீரென புகுந்து கையில் கிடைத்தவர்களின் கழுத்தில் டயர்களை மாட்டி பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி விட்டனர் என்றனர். நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. நைஜீரியாவை முஸ்லிம் நாடாக அறிவிக்க வேண்டும் என்று போகோ ஹரம் என்ற அமைப்பு பயங்கர வன்முறையில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்புதான் தாக்குதல் நடத்தி இருக்கும் என்று சந்தேகம் எழுந்துள்ளதாக என்று போலீசார் கூறினர்.