நினைத்தாலே இனிக்கும் நடிகை அனுஜா தனது பிறந்தநாள் தேதியை அஜீத்துக்கு எழுதி அனுப்பி இருந்தார். சரியாக பிறந்தநாள் அன்று அனுஜாவுக்கு போனில் வாழ்த்து கூறினார் அஜீத்.
தான் இசை அமைக்கும் எல்லா படத்திலும் எல்.ஆர்.ஈஸ்வரிக்கு பாட வாய்ப்பு தருவதாக உறுதி அளித்திருக்கிறார் தமன்.எஸ்.
பிரசவத்துக்கு பிறகு அதிகரித்த உடல் பருமனை மளமளவென்று குறைத்து வரும் ஐஸ்வர்யாராயின் தோற்றத்தை கண்டு பாலிவுட்டில் உள்ளவர்கள் புருவத்தை உயர்த்துகிறார்களாம்.
அம்முவாகிய நான் பட ஹீரோயின் பாரதி தனது திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு டி.வி.சீரியலில் நடிக்கிறாராம். இந்த ஷூட்டிங் நேரம்தான் அவருக்கு வசதியாக இருக்கிறதாம்.
30 வயதுக்கு பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறார் முமைத்கான்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook