பாலிவுட் ஸ்டார் நடிகைகளில் ஒருவர் பிபாஷா பாஸு. இவர் ஹீரோ ஜான் ஆப்ராகமுடன் நெருக்கமாக இருந்தார். பார்ட்டி, டிஸ்கோத்தே என்று ஜோடியாக சுற்றினர். இருவரும் காதலிக்கிறார்கள், திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்று கிசுகிசு பரவியது. இதற்கு இருவருமே மறுப்பு தெரிவிக்காமல் இருந்தனர். சமீபத்தில் ஜான் ஆப்ரகாம், பிரியா ரன்சல் என்ற பெண்ணை மணக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து கோபம் அடைந்த பிபாஷா பாஸு, ஜான் ஆப்ரகாமை பிரிந்தார். இந்நிலையில் சாஹித் கபூர், ராணா தக்குபாத்தி ஆகியோருடன் பிபாஸா பாஸு நெருக்கமாக இருப்பதாக பாலிவுட்டில் கிசுகிசு பரவியது. அவர்களுடன் டேட்டிங் செல்வதாகவும் கூறப்பட்டது. இதையறிந்து கோபம் அடைந்த பிபாஷா மீடியாக்கள் மீது பாய்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது: நீண்ட நாட்களாகவே என்னை ஹீரோக்களுடன் இணைத்து கிசுகிசு வந்துகொண்டிருக்கிறது. டேட்டிங் போகிறேன். ஹீரோவை பிரிந்துவிட்டேன், மீண்டும் இணைந்துவிட்டேன், திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்று பல கதைகள் உலவுகிறது. இதையெல்லாம் நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனென்றால் இது எதுவுமே நடக்கவில்லை. ஜாலியாக ஒரு ஹீரோவுடன் பேசினால் உடனே அவரை விரும்புகிறேன் என்று அர்த்தமில்லை. ஹீரோக்களை சந்தித்தால் அதை டேட்டிங் என்று குறிப்பிடக்கூடாது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook