காஷ்மீரில் ராணுவ வீரர் சுட்டுக் கொலை
ஜம்மு :ஜம்மு காஷ்மீர் கிஷ்ட்வார் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கிஷ்ட்வார் மாவட்டத்தில் உள்ள பாலமர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் ராணுவ பிரிவுக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து உள்ளூர் போலீசுடன் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பாலமர் பகுதியில் மறைவிடத்திலிருந்து தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது சுட்டனர். இதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே அங்கு கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. நள்ளிரவு வரை இந்த சண்டை நீடித்தது. இருளை பயன்படுத்தி தீவிரவாதிகள் தப்பினர். தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.