Untitled Document
2012
03
May
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி : திருமாவளவன் உள்பட 100 பேர் கைது


சென்னை :சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்பட 100 பேரை போலீ சார் கைது செய்தனர்.
இலங்கையில் 60 ஆண்டுகள் பழமையான மசூதியை இடித்ததை கண்டித்தும், இதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்யக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மியூசிக் அகடமி முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந் தது. கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்னியரசு, யூசுப் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது இலங்கை அதிபருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சியினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். திருமாவளவன் உள்பட 100,க்கும் அதிகமானோர் கைதாகினர். கைதான அனைவரும் லஸ் அவென்யுவில் உள்ள சமுதாய நல கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முற்றுகையின்போது சிலர் ராஜபக்சே உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,