சட்டசபையில் 5 சட்ட முன் வடிவுகள் : அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல்
சென்னை :சட்டசபையில் வணிகவரி துறை அமைச்சர் சி.வி.சண்முகம் 5 சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தார். மதிப்பு கூட்டு வரியில் 3ம் திருத்த சட்ட முன் வடிவு, மதிப்பு கூட்டு வரியில் 4ம் திருத்த சட்ட முன் வடிவு ஆகிய இரு சட்ட முன் வடிவுகளை அவர் தாக்கல் செய்தார். இந்த சட்ட முன் வடிவுகளின்படி வணிகத்தின்போது, விற்பனை உள்ளடங்கிய மொத்த விற்பனை தொகை ஒரு கோடிக்கு அதிகமாகும்போது, பதிவு பெற்ற வணிகர்கள் ஒவ்வொருவரும் அவர்களது கணக்குகளை ஆடிட்டர் ஒருவர் மூலம் தணிக்கை செய்ய வேண்டும் என்றும், விமானங்களுக்கான எரி பொருளுக்கு விதிக்கப்படும் வாட் வரி 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் உயருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய முத்திரை தமிழ்நாடு திருத்த சட்ட முன் வடிவு, இந்திய முத்திரை தமிழ்நாடு 2ம் திருத்த சட்ட முன்வடிவையும் அவர் அறிமுகம் செய்தார். இதையடுத்து பதிவு தமிழ்நாடு திருத்த சட்ட முன் வடிவையும் அவர் அறிமுகம் செய்தார்.