விற்பனை வரி ரத்து காங். எம்எல்ஏ கோரிக்கை
சென்னை சமையல் எண்ணெய் மீது ரூ.5 கோடிக்கு மேல் உற்பத்தி செய்பவர்களுக்கு 5 சதவீத வரி விதித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் சமையல் எண்ணெயை தான் அடிதட்டு மக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த வரி விதிப்பின் பாதிப்பு ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரடியாக பாதிக்கும். இதன் மூலம் அரசுக்கு பெரிய வருமானம் கிடைக்க போகிறது. ஆனால் இந்த நிறுவனங்கள் கூடுதலாக 5 சதவீத வரியை கூட்டி மொத்ததில் 10 சதவீத வரியாக உயர்த்திவிட வாய்ப்புள்ளது. எனவே, இந்த பெண்களுக்கு எதிரான விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.