இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அப்போது காலில் ஏற்பட்ட காயத்தினால் அணியில் இருந்து விலகினார். அதன்பின் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். தற்போது ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள அவர் உடல்தகுதியை நிரூபிக்க கடந்த மாதம் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார். உடல் சோதனையின் போது 2 கால்களிலும் வலி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளார். இனி 5 மாதம் கழித்துதான் அவர் களத்திற்கு வருவார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook