சென்னை :சட்டசபையில் இன்று தொழில், கதர்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது. விவாதத்தின்போது பேசிய கதர்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன், ‘‘எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா. ஆனால், எம்ஜிஆர் படத்தில் வரும் ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்’ என்ற பாடலைப் போன்று அவர்கள் அவைக்கு வருவது கிடையாது’’ என்றார். இதற்கு தேமுதிக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் மறுத்துவிட்டார். இதையடுத்து, தேமுதிக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook