Untitled Document
2012
02
May
மீண்டும் உதைவாங்கியது ராஜஸ்தான் : சேவாக் ருத்ரதாண்டவம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


ஐபிஎல்லில் நேற்று இரவு ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் , டெல்லி அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. டிராவிட் 43 பந்தில் 7 பவுண்டரியுடன் 57 ரன்னும், ரகானே 32 பந்தில் 7 பவுண்டரியுடன் 42 ரன்னும் விளாசினர். வாட்சன் 8, ஓஜா 1, ஹாட்ஜ் 1, மனேரியா 2, கோஸ்சுவாமி 18, சவான் 7 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் நெகி 4, உமேஷ்யாதவ், மோர்க்கல் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய டெல்லி அணி முதல் ஓவரிலேயே ஜெயவர்த்தனே விக்கெட்டை இழந்தது. அவர் ரன் ஏதும் எடுக்காமல் சவான் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதன்பின்னர் பீட்டர்சன் சேவாக்குடன் இணைந்தார். சேவாக் வழக்கம்போல் அதிரடியில் மிரட்டினார். பீட்டர்சன் 36, ராஸ்டெய்லர் 6 ரன்னில் வெளியேறினர். 38 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சருடன் 73 ரன்கள் விளாசிய சேவாக்,

ஹாக் பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் டெல்லி அணி 15.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. நகார் 9, ஓஜா 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் ஹாக் 2, சவான், வாட்சன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது நெகிக்கு வழங்கப்பட்டது. டெல்லி அணிக்கு இது 8வது வெற்றியாகும். ராஜஸ்தான் அணி 6வது தோல்வியை சந்தித்தது.  ராஜஸ்தான் அணி பேட்டிங்கை சிறப்பாக தான் துவக்கியது. 8.4 ஓவரில் அந்த அணி 71 ரன் குவித்திருந்த போது ரகானே தேவையில்லாமல் ரிவர்ஸ் ஸ்விப் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் வந்த வாட்சன், ஓவிஸ்ஷா, ஹாக், மனேரியா ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பியதால் 95 ரன்னுக்கெல்லாம் 5 விக்கெட் காலியானது. முதலில் சென்ற ரன்ரேட் விகிதப்படி ராஜஸ்தான் அணி 180 ரன்கள் தாராளமாக எடுக்க வாய்ப்பிருந்தது. ஆனால் நெகி சுழலில் எல்லாமே மாறிவிட்டது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,