நடுவானில் விமானம் கோளாறு : 106 பயணிகள் உயிர் தப்பினர்
மீனம்பாக்கம்: சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சி செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 106 பயணிகள், 5 விமான சிப்பந்திகள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமான இன்ஜினில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டது. இதை விமானி கண்டுபிடித்தார். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். விமானத்தை சென்னைக்கு திருப்பும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர் விமானம் 11.15 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.