சென்னை: ராயப்பேட்டையில் சொத்து தகராறில் தலையில் கல்லைப் போட்டு ரவுடி கொல்லப்பட்டார். இது தொடர்பாக அவரது அக்கா, தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ராயப்பேட்டை புதுப்பேட்டை கார்டனை சேர்ந்தவர் பழனி (38). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இவரது அக்கா சாந்தி, தம்பி நாகராஜ். இவர்கள் அருகருகே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களது தந்தை பெயரில் 600 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை 3 பங்காக பிரிக்க வேண்டும் என்று சாந்தி, நாகராஜ் கூறி வந்தனர். இதனால் 2 பேரையும் விரட்டி விட்டு மொத்த இடத்தையும் அபகரிக்க வேண்டும் என பழனி திட்டமிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக நேற்றிரவு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்ந¤லையில் இன்று காலை மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது போதையில் இருந்த பழனி, சாந்தி மற்றும் நாகராஜை கொலை செய்வதாக மிரட்டியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த இருவரும் உருட்டுக் கட்டையால், பழனியை தாக்கினர். பின் பெரிய கல்லை எடுத்து பழனியின் தலையில் தூக்கிப் போட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பழனி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய சாந்தி, நாகராஜை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook