பயணிகளை குஷிப்படுத்த சீன ஏர்போர்ட்டில் நடனமாடிய அழகிகள்
பீஜிங் : சீன ஏர்போர்ட்டில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகளை மகிழ்விக்க நடன அழகிகள் வர வழைக்கப்பட்டனர். சீனாவின் தாலியான் நகரில் கடந்த 3 நாட்களாக பலத்த சூறைக்காற்று வீசுகிறது. அத்துடன் மூடுபனியும் உள்ளது. இதனால் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். அவர்கள் பொழுதுபோக்க நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம் என்று ஏர்போர்ட்டில் பணியில் இருந்த இளம் அதிகாரிகள் சிலர் யோசனை தெரிவித்தனர். அதை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், உடனடியாக நடன அழகிகளை வரவழைத்தனர். அவர்களும் ஏர்போர்ட்டுக்கு வந்து தாம்தூம் என ஆட்டம் போட, பயணிகள் உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று மூடுபனியும் சூறை காற்றும் குறைந்ததை அடுத்து விமான போக்குவரத்து மெல்ல சீரடைய தொடங்கியது.