ஒரு கோடி இந்தியர் அமெரிக்காவில் குடியேற ஆர்வம்
வாஷிங்டன் : அமெரிக்காவில் குடியேற வேண்டும் என்று பல நாட்டு இளைஞர்கள் துடிக்கின்றனர். இதுகுறித்து சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வேயில், ஒரு கோடி இந்தியர்கள், அமெரிக்காவில் குடியேற தொடர்ந்து முயற்சி செய்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த சர்வேயில் சீனர்கள் தான் முன்னிலையில் உள்ளனர். அமெரிக்காவில் குடியேற 2.20 கோடி சீனர்கள் காத்திருக்கின்றனர். அதை தொடர்ந்து நைஜீரியா 1.50 கோடி, வங்கதேசம் 80 லட்சம், பிரேசில் நாட்டை சேர்ந்த 70 லட்சம் பேர் அமெரிக்காவில் குடியேற விரும்புகின்றனர். இவர்களுடைய விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. அதிக மக்கள் குடியேற விரும்பும் நாடாக அமெரிக்கா இருப்பதாக சர்வே தெரிவித்துள்ளது. மேலும் 30 பேரில் ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற விரும்புகின்றனர் என்றும் அமெரிக்காவை அடுத்து இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், சவுதி அரேபியாவில் குடியேற அதிகமானோர் விரும்புவதாகவும் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.