கிளார்க், அதிகாரிகள் உள்பட பொதுத்துறை வங்கிகளில் 7082 இடங்களுக்கு விண்ணப்பம்
நாகர்கோவில்: பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கிளார்க், அதிகாரிகள் உள்பட 7082 காலி பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கிளார்க், பிஒ, மானேஜிங் டிரெய்னி நிலையில் ஐபிபிஎஸ் தேர்வு எழுதி ஸ்கோர் கார்டு வைத்திருப்போர் விண்ணப்பிக்கலாம். கிளார்க் நிலையில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஐபிபிஎஸ் தேர்வு எந்த மாநிலத்தில் எழுதியுள்ளனரோ அந்த மாநிலத்தில் உள்ள காலியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க இயலும். பாங்க் ஆப் இந்தியா, தேனா பாங்க், ஆந்திரா பாங்க், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்து பாங்க் ஆகியவற்றில் 6182 கிளார்க் பணியிடங்கள் உள்ளன. புரொபஷனரி ஆபீசர் நிலையில் 900 காலியிடங்கள் உள்ளன. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கிளரிக்கல் நிலையில் மே 18 வரை விண்ணப்பிக்கலாம். பிஓ நிலைக்கு மே 10 வரை விண்ணப்பம் பெறப்படும். மேலும் விவரங்களுக்கு www.psbindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்